Manaiadi Sasthiram - மனையடி சாஸ்திரம்

மனையடி சாஸ்திரம் என்பது வீடு மற்றும் வீட்டின் ஒவ்வொரு அறையும் எந்த அளவில் எவ்வளவு நீள அகலம் இருக்க வேண்டும் என்பதைக் கூறுவது ஆகும். மனையடி அளவுகளைக்கொண்டு அறைகளை அமைக்கும் பொழுது வாஸ்து பலம் கூடும். மனையடி சாஸ்திரப்படி மனையானது ஒரே சீரான நில மட்டம் கொண்டதாக இருக்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு பார்த்த மனையின் நில மட்டம் மேற்கு பகுதியை விட கிழக்குப் பகுதி தாழ்வாக இருக்க வேண்டும். வடக்கு அல்லது தெற்கு பார்த்த மனையின் நிலமட்டம் தெற்குப் பகுதியை விட வடக்குப் பகுதி தாழ்வாக இருக்க வேண்டும்.

நாம் வாழ்வதற்கு அமைக்கும் வீடானது வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்டால் அதில் வாழ்பவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ இயலும். வாஸ்து என்பது நமது வீட்டின் அறைகளை அமைக்கும் கலை ஆகும். வாஸ்து சாஸ்திரத்தின் ஒரு பகுதி தான் மனையடி சாஸ்திரம் என்பது.

உள் கூடு அளவு பலன்கள்
8 அடி மிகுந்த பாக்கியமுண்டு
10 அடி ஆடு,மாடு குறைவிலா வாழ்வுண்டு
16 அடி மிகுந்த செல்வமுண்டு
17 அடி அரசனை போல் பக்கியசேரும்
21 அடி பசுக்களுடன் பக்கியசேரும்
27 அடி மிக்க செல்வத்துடன் மதிக்க வாழ்வர்
28 அடி செல்வமும்,தெய்வ கடாஷமுண்டு
30 அடி லக்ஷ்மி கடாஷம் பெற்று வாழ்வர்
32 அடி முகந்தனருள் பெற்று வையகம் வாழ்வர்
35 அடி லக்ஷ்மி கடாஷமுண்டு
36 அடி அரசனையும் அரசாள்வான்
41 அடி இன்பமும்,செல்வமும் உண்டு
42 அடி லக்ஷ்மி குடிஇருப்பாள்
45 அடி சற்புத்திரர் உண்டு
46 அடி குடும்ப விழ்ச்சி உண்டாகும்
47 அடி அகலாத வறுமை
48 அடி அக்கினி பாக்கியம்
49 அடி துயரம் மிகும்
50 அடி கால்நடை விருத்தி உண்டாகும்
52 அடி தானிய விருத்தி உண்டாகும்
54 அடி லாபம்
56 அடி புத்திர பாக்கியம் உண்டு
இன்றைய வாசகம் - 28.04.2025 Mon

ஆசைகளால் வெற்றியை அடைய பயப்படாதே.